சபரிமலை கோயிலில் இன்று முதல் நாள்தோறும் 5,000 பக்தர்கள் அனுமதி

0 10410
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு , பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வார நாட்களில் 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தினசரி அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், கூடுதல் பக்தர்களை அனுமதிக்கக்கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம், தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments