மும்பைத் தாக்குதல் வழக்கு : தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை நடக்கும் என அறிவிப்பு

0 689
மும்பைத் தாக்குதல் வழக்கு : தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை நடக்கும் என அறிவிப்பு

மும்பைத் தாக்குதலில் தொடர்புள்ள தஹாவூர் ராணாவை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை நடக்கும் என்று கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலிஸ் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல், 22ம் தேதி விசாரணை நீடிக்கும் என்று நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியான் தெரிவித்தார். இது தொடர்பாக, பிப்ரவரி, 1ம் தேதிக்குள், ராணா பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த, 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஆறு அமெரிக்கர்கள் உட்பட, 166 பேர் கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments