அதிக விடுப்பு எடுத்தவர்களின் பட்டியலை அனுப்பி வைக்க அரசு கல்லூரிகளின் முதல்வர்களுக்குக் கல்லூரிக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை

0 15893
அதிக விடுப்பு எடுத்தவர்களின் பட்டியலை அனுப்பி வைக்க அரசு கல்லூரிகளின் முதல்வர்களுக்குக் கல்லூரிக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை

அதிக விடுப்பு எடுத்துள்ள பேராசிரியர்களின் பட்டியலை அனுப்பி வைக்கும்படி அரசு கல்லூரிகளின் முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் இருந்து அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணிகளில் மருத்துவ விடுப்பு, கொரோனா விடுப்பு தவிர, அதிகமாக விடுப்பு எடுத்தவர்கள், அறிவுறுத்தலுக்குப் பின்னும் பணி செய்யாதவர்களின் விவரங்களைக் கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments