டிசம்பர் 23 முதல் மு.க.ஸ்டாலின் நேரடி பிரச்சாரம்- துரைமுருகன் தகவல்

0 3184
டிசம்பர் 23 முதல் மு.க.ஸ்டாலின் நேரடி பிரச்சாரம்- துரைமுருகன் தகவல்

ட்டப்பேரவை தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்பதால், ஜனவரி முதல் வாரத்தில் நேரடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் மாநில, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற பின்பற்ற வேண்டிய பிரச்சார உத்திகள், மக்களை அணுகும் முறைகள் ஆகியவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், டிசம்பர் 23ஆம் தேதி முதல் மு.க.ஸ்டாலின் 16 ஆயிரம் ஊர்களில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிய உள்ளதாக தெரிவித்தார்.

திமுக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பிரச்சார வீடியோவும் நிர்வாகிகள் கூட்டத்தில் திரையிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments