காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயார் - ராகுல் காந்தி சூசகம்

0 2235
காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் ஏற்க தயாராக இருப்பதாக ராகுல் காந்தி சூசகமாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் ஏற்க தயாராக இருப்பதாக ராகுல் காந்தி சூசகமாக தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராகுல் ராஜிநாமா செய்தநிலையில், அவரது தாயார் சோனியா இடைக்கால தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இருப்பினும் தலைவர் பதவிக்கு நிரந்தரமாக ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமென சில மூத்த தலைவர்கள் வலியுறுத்தியபடி இருப்பதால் அதிருப்தி நிலவுகிறது. இந்த அதிருப்திக்கு முடிவு கட்டும் நோக்கில் டெல்லியில் நேற்று மாலை சோனியா இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ராகுல் மீண்டும் தலைவராக வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ராகுல்காந்தி பேசுகையில், என்ன பொறுப்பை அளித்தாலும், அதை நிறைவேற்றி தருவேன் என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments