விபத்து அல்ல கொலை, விசாரணையில் உறுதி..!

0 372

கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் மெக்கானிக்காக பணியாற்றிவந்தார். இவர் நேற்று முன் தினம் இரவு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது சாலைத் தடுப்பில் மோதி தலையில் காயமடைந்த நிலையில் உயிரிழந்தார். இதனை விபத்து வழக்காக போலீசார் பதிவு செய்தனர்.

இந்நிலையில் உடற்கூறு பரிசோதனையின் போது கணேஷின் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் கத்திக்குத்துக் காயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உயிரிழக்கும் முன் கணேஷ் யாருடன் சென்றார் என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது 17 வயதுச் சிறுவனுடன் கணேஷ் சென்றது தெரியவந்தது.

 image

இதையடுத்து 17 வயதுச் சிறுவனைப் பிடித்து போலீசார் உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட போது உண்மைகள் வெளிவந்தன. சிறுவனுக்கு வேண்டிய பெண்ணை கணெஷ் தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததும், இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், கணேஷை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்தது.

கொலை செய்துவிட்டு போலீசாரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க விபத்து போன்ற தோற்றத்தை உருவாக்க சிறுவன் திட்டமிட்டுள்ளான். இதற்காக கணேஷுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோதே மறைத்து வைத்திருந்த கத்தியால் முதலில் இடுப்பில் குத்தியதாகவும் பின்னர் கழுத்தை அறுத்துவிட்டு குதித்து விட்டதாகவும் சிறுவன் தெரிவித்தான். இதனால் நிலைதடுமாறிய கணேஷ் இருசக்கர வாகனத்துடன் சாலைத் தடுப்பில் மோதி பின் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கொலைவழக்காக மாற்றி அந்தச் சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments