இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சென்ற பெண் தவறி கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி பலி

இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சென்ற பெண் தவறி கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி பலி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து சென்ற பெண் தவறி கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி பலியான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
மகேஸ்வரி என்பவர் தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வங்கியில் பணம் எடுக்க சென்ற போது பார்க்கிங்கில் இருந்த நபர் ஒருவர் கவனக்குறைவாக தனது இருசக்கர வாகனத்தை பின்னோக்கி எடுத்தார்.
அப்போது நிலைதடுமாறிய மகேஸ்வரி தவறி கீழே விழுந்ததில் எதிர் திசையில் வந்த பேருந்தில் பின் சக்கரம் மகேஸ்வரியின் தலையில் ஏறி இறங்கியது. இதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
Comments