ஹரியானாவில் முன்விரோதம் காரணமாக தனியார் மருத்துவமனை மீது வாகனத்தை கொண்டு பல முறை மோதிய ஓட்டுனர் கைது

ஹரியானாவில் முன்விரோதம் காரணமாக தனியார் மருத்துவமனை மீது வாகனத்தை கொண்டு பல முறை மோதிய ஓட்டுனர் கைது
ஹரியானாவில் குருகிராம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மீது சரக்கு வாகனத்தை கொண்டு பல முறை மோதிய வாகன ஓட்டுனர் விகாஸ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவமனை நிர்வாகத்துடன் முன்விரோதம் காரணமாக மருத்துவமனையின் வாகனத்தை எடுத்து வந்து அவர் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்த தாக்குதலில் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், மருந்துக் கடை மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன. உடனடியாக சுதாரித்துக் கொண்டதால் யாரும் காயம் அடையவில்லை.
Comments