செல்போனில் கவனம் செலுத்திய தந்தை.. மின்சாரம் தாக்கி 8 மாத குழந்தை பலி

0 2031

ஊத்துக்கோட்டை அருகே எட்டு மாத ஆண் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் ஜெ.ஜெ.நகர் பழங்குடியின குடியிருப்பில் வசித்து வருபவர்கள் மாரிமுத்து - குப்பம்மாள் தம்பதியர். இவர்களுக்கு பிறந்து எட்டு மாதங்களேயான மதன் என்ற ஆண்குழந்தை உள்ளான். ஏழ்மை நிலை காரணமாக மாரிமுத்து தம்பதயினர் ஓலைக் குடிசையில் வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு மாரிமுத்து தனது செல்போனை சார்ஜர் போட்டுக்கொண்டே பயன்படுத்துவதற்காக ஜங்சன் பெட்டியினை தரையில் வைத்து பயன்படுத்தி வந்துள்ளார். மாரிமுத்து அருகில் எட்டு மாத குழந்தை மதனும் விளையாடிக் கொண்டிருந்தான். செல்போனை பயன்படுத்திக் கொண்டிருந்த மாரிமுத்து அருகில் இருந்த குழந்தையை கவனிக்க தவறிவிட்டார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மதன் அருகிருந்த ஜங்ஷன் பெட்டியில் கைவைக்க, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டான்.

தூக்கி வீசப்பட்டதில் 8 மாத குழந்தை மயக்கமடைந்தது. இதனால் பதறிப்போன மதனின் பெற்றோர், குழந்தையை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து குழந்தையின் சடலத்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜங்சன் பாக்சில் இருந்த மின்சாரம் தாக்கி 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments