துருக்கி தனியார் மருத்துவமனையில் தீ விபத்து; 9 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

0 588
துருக்கி தனியார் மருத்துவமனையில் தீ விபத்து; 9 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

துருக்கியில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

Gaziantep மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலருக்கு செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆக்சிஜன் குழாயில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதால் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மற்ற நோயாளிகள் அனைவரும் பத்திரமாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 2 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments