திருவனந்தபுரத்தில் விதவிதமான கேக்குகளுடன் கிறிஸ்துமசை வரவேற்க தயாராகும் பேக்கரிகள்

0 499
திருவனந்தபுரத்தில் விதவிதமான கேக்குகளுடன் கிறிஸ்துமசை வரவேற்க தயாராகும் பேக்கரிகள்

திருவனந்தபுரம் நகரில் உள்ள பேக்கரிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விதவிதமான ருசியான கேக்குகள் தயாராகி வருகின்றன.

மிகச்சிறிய கடையாக இருந்தாலும் சரி...பெரிய கடையாக இருந்தாலும் சரி...எங்கெங்கு நோக்கினும் வண்ணமயமான கேக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டுகளில் கிறிஸ்துமசுக்கு எட்டு கோடி ரூபாய் விற்பனையைக் கண்டது கேக் தயாரிப்புத் தொழில். இந்த ஆண்டு அந்த அளவுக்கு ஆர்டர்கள் கிடைக்கவில்லை என்று கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

கொரோனா அச்சத்தால் குடும்பத்தினருடன் மக்கள் வருவது குறைந்துவிட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments