ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு : நிலச்சரிவால் ஜம்மு -ஸ்ரீநகர் சாலை துண்டிப்பு

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு : நிலச்சரிவால் ஜம்மு -ஸ்ரீநகர் சாலை துண்டிப்பு
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிமூடியதால் ஜம்மு -ஸ்ரீநகர் இடையிலான நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனின் கடும் குளிர் நேற்று காணப்பட்டது. மைனஸ் 6 புள்ளி 4 டிகிரி செல்சியஸாக நேற்றைய குளிர் நிலவரம் பதிலானது.
நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து பந்திபோராவில் இருந்து வந்துக் கொண்டிருந்த இரண்டு கார்கள் பனியில் சிக்கின. அதில் இருந்தவர்கள் பத்திரமாக ராணுவத்தால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Comments