இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்

0 806
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்

ஸ்ரேலுக்கு வருகை தந்த கொரோனா தடுப்பூசியை பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முதல் நபராக போட்டுக் கொண்டார்.

Pfizer நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கடந்த வாரம் கப்பல் மூலம் இஸ்ரேல் கொண்டு வரப்பட்டன. நேற்று முதன்முதலாக இந்த தடுப்பூசி மருந்து பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிற்கு போடப்பட்டது.

தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் Yuli Edelstein,ஷீபா மருத்துவ மையத்தின் டைரக்டர் ஜெனரல் Yitshak KIreiss மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் Hezi Levi ஆகியோர் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.

இஸ்ரேலில் கொரோனாவால் இதுவரை 3ஆயிரத்து 70 பேர் உயிரிழந்துள்ளனர். 90 லட்சம் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேருக்கு தேவையான தடுப்பூசி ஆண்டு இறுதிக்குள் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments