கொரோனா காரணமாக ரயில்வே துறை சுமார் 700 முன்களத் தொழிலாளர்களை இழந்துவிட்டதாக தகவல்

0 1785
கொரோனா காரணமாக ரயில்வே துறை சுமார் 700 முன்களத் தொழிலாளர்களை இழந்துவிட்டதாக தகவல்

கொரோனா காரணமாக ரயில்வே துறை கடந்த 9 மாதங்களில் சுமார் 700 முன்களத் தொழிலாளர்களை இழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் யாதவ், பொதுமக்களுக்கு சேவையாற்ற ரயில்வே ஊழியர்கள் கடுமையான தியாகங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலானோர் குணமாகி விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மண்டலத்திலும் கோவிட் சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தனது ஊழியர்களின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி வருவதாகவும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments