மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களைக் கைப்பற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை

0 1748
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களைக் கைப்பற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களைக் கைப்பற்றும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மிட்னாபுரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், பாஜகவுக்கு 5 ஆண்டுகள் கொடுத்தால் வங்கத்தை தங்கமாக மாற்றிக் காட்டுவதாக உறுதியளித்தார்.

இக்கூட்டத்தில்  அமித் ஷா முன்னிலையில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏக்களும் ஒரு எம்பியும் பாஜகவில் இணைந்தனர். 

இது தொடக்கம் தான் என்று கூறிய அமித் ஷா தேர்தல் நெருங்கும்போது மம்தா பானர்ஜி கட்சியில் தனிமைப்படுத்தப்படுவார் என்று கூறினார்.

இதனிடையே கட்சியில் இருந்த துரோகிகளும் வைரஸ் கிருமிகளும் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments