எந்தச் சூழ்நிலையிலும் விவசாயிகளின் நிலத்தைப் பறிமுதல் செய்ய புதிய வேளாண் சட்டம் அனுமதிக்காது - மத்திய அரசு திட்டவட்டம்

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக, உழவுக்கு உயிரூட்டும் விவசாயிகளுக்கு, வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது.
நெல், கோதுமை உள்ளிட்ட வேளாண் விளைபொருள் கொள்முதலுக்கான, குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க அரசு தயார் எனத் தெரிவித்திருக்கிறது. எந்த சர்ச்சைகள் எழுந்தாலும் நீதிமன்றத்தை நாட விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
வேளாண்மை ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய மாநிலங்களுக்கு உரிமை அளிக்கப்படும் என்றும், யாரும் சட்டவிரோதமாக நிலத்தைக் கையகப்படுத்த முடியாது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது.
எந்தச் சூழ்நிலையிலும், விவசாயிகளின் நிலத்தைப் பறிமுதல் செய்ய சட்டம் அனுமதிக்காது என்றும் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
Comments