விவசாயிகளின் வாழ்க்கையை புதிய வேளாண் சட்டங்கள் மேம்பாடு அடையச் செய்யும் - பிரதமர் மோடி

0 1175
விவசாயிகளின் வாழ்க்கையை புதிய வேளாண் சட்டங்கள் மேம்பாடு அடையச் செய்யும் - பிரதமர் மோடி

நாட்டில் உள்ள உழவர் பெருமக்களின் வாழ்வை, மேம்பாடு அடையச் செய்வதற்காகவே, புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும், திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாநில விவசாயிகளுக்கும், அவரவர், தாய்மொழியில், புதிய வேளாண் சட்டங்கள் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும், தெளிவான விளக்கங்களுடன், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கடிதம் எழுதியுள்ளார் என்று கூறியுள்ள பிரதமர், இந்த கடிதத்தை, டுவிட்டர் பக்கத்தில் இணைத்துப் பதிவிட்டுள்ளார். 

இந்த கடிதம் அளிக்கும் உறுதிமொழிகள், விளக்கங்கள் மூலம், உழவர் பெருமக்களுடன், இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments