தமிழகத்தின் நலனுக்காக தொடர்ந்து உழைக்க தயார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 1902

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை தமது தொகுதியான எடப்பாடியில் இருந்து தொடங்கி உள்ளார். தமிழகத்திற்காக தொடர்ந்து உழைக்க தயாராக இருப்பதாவும், மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தமிழகத்தில் அதிமுக சார்பிலான தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது சொந்த தொகுதியான எடப்பாடியில் தொடங்கி உள்ளார். இதற்காக அவர் தாரமங்கலம் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டார். வழிபாட்டிற்கு பின்னர் அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். 

எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு ஊர்களில் அவர் வேனில் சென்றும், சில இடங்களில் நடந்தும் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு சிறப்பான முறையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி உள்ளது என்றார். மற்ற மாநிலத்தை விட படிப்படியாக தமிழகத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக அரசை விமர்சனம் செய்து வருவதாக அவர் கூறினார். 

கொரோனா வைரஸ் காலத்தில் கூட தமிழகத்தில் மட்டும்தான் தொழில் துவங்க தொழிலதிபர்கள் முன்வந்ததாக அவர் குறிப்பிட்டார். வேளாண்மைத் துறையில் வரலாற்று சாதனையை தமிழக அரசு புரிந்துள்ளது என்றும், 34 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவர்களின் எண்ணங்களை நன்கு அறிந்ததால் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி மருத்துவ மாணவர்களின் கனவை நனவாக்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்

தமிழகத்திற்கு உழைப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறி அவர் வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments