மதுரை கூடலழகர், திருமோகூர் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை

0 1076

மதுரை கூடலழகர், திருமோகூர் கோவிலில் வருகிற 25-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி தற்போது நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு வருகிற 25-ந் தேதி நடக்கிறது. இந்தாண்டு சொர்க்கவாசல் மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

அந்த நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதே போன்று திருமோகூர் காளமேகபெருமாள் கோவிலும் 25- ந் தேதி மாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.

அந்த நேரத்தில் பக்தர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments