அமெரிக்க விண்வெளிப்படை வீரர்கள் இனி ’கார்டியன்ஸ்’ என அழைக்கப்படுவார்கள் என அறிவிப்பு

0 1127

அமெரிக்க விண்வெளிப்படை வீரர்கள் இனி’கார்டியன்ஸ்’ என அழைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தரைப்படை, கடற்படை,விமானப்படை தவிர அமெரிக்காவில் ‘ஸ்பேஸ் போர்ஸ்’ என்ற விண்வெளிப்படை உள்ளது. இந்த படைப்பிரிவில் 16 ஆயிரம் வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த விண்வெளிப்படை அமெரிக்க தகவல் தொடர்பு, செயற்கைக்கோள் உள்ளிட்ட சொத்துகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

இந்த படைப்பிரிவில் உள்ள வீரர்களை எப்படி அழைப்பது என என்பது குறித்து யோசனைகள் அளிக்க பொதுமக்களிடம் கருத்துக்கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர் இந்த படை வீரர்களை ’கார்டியன்ஸ்’ என அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில், அமெரிக்க விண்வெளி படையின் பணியாற்றும் வீரர்கள் ’கார்டியன்ஸ்’ என அழைக்கப்படுவார்கள் என இன்று அறிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments