காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வழிகள் குறித்து மூத்த தலைவர்களுடன் சோனியாகாந்தி ஆலோசனை

0 1192
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வழிகள் குறித்து மூத்த தலைவர்களுடன் சோனியாகாந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியைச் சீரமைப்பது குறித்து மூத்த தலைவர்களுடன் சோனியாகாந்தி ஆலோசனை நடத்தியுள்ளார்.

கொரோனா சூழலால் பல மாதங்களாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சோனியா சந்தித்துப் பேசவில்லை. அதேநேரத்தில் கட்சியைச் சீரமைக்க வேண்டியுள்ளதாக 4 மாதங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் சோனியாவின் இல்லத்தில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ப.சிதம்பரம், அசோக் கெலாட், குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 23 பேர் கலந்துகொண்டனர்.

ராகுல், பிரியங்கா ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கட்சியின் இப்போதைய நிலை, எதிர்காலத்தில் அதை வலுப்படுத்தும் வழிகள் ஆகியவை குறித்துக் கூட்டத்தில் பேசப்பட்டதாகப் பிருத்திவிராஜ் சவான் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments