அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட், முன்எப்போதும் இல்லாத பட்ஜெட்டாக இருக்கும் - அமைச்சர் நிர்மலா சீதாராமன்

0 1447

அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட், முன்எப்போதும் இல்லாத பட்ஜெட்டாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய அவர், அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், வருகிற பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்றார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது என்ற அவர், தொழில்துறையினர் தங்கள் யோசனைகளை அனுப்பி வைக்கலாம் என்றார்.

இதற்கு முன்பு இல்லாத பட்ஜெட்டை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், இதுபோல், ஒரு பெருந்தொற்றுக்கு பிறகு தயாரிக்கப்படும் பட்ஜெட்டை கடந்த 100 ஆண்டு கால இந்தியா பார்த்திருக்காது என்றார். வளர்ச்சிக்கு புத்துயிரூட்ட கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments