தஞ்சை, நாகை உள்பட 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 1528

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், குமரிக்கடல் பரப்பில் ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த இரு நாட்களுக்கு தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த இரு நாட்களுக்கு சென்னை நகரில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குமரிக்கடல் பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வடகிழக்கு காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த கடல் பரப்பிற்கு செல்ல வேண்டாமென தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments