திரிணமூல் முன்னாள் அமைச்சர், உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்

மேற்குவங்க அரசியல் பெருந்தலைகளில் ஒருவராகக் கருதப்படுபவரும், திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சருமான சுவேந்து அதிகாரி, ஒரு திரிணமூல் எம்.பி. மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
2 நாள் பயணமாக மேற்குவங்கம் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொல்கத்தாவில் ராமகிருஷ்ணா ஆசிரமம் சென்று, சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தினார்.
பெலிஜூரி என்ற கிராமத்தில் ஒரு விவசாயியின் இல்லத்தில் மதிய உணவு அருந்தினார்.
பின்னர் மித்னாப்பூரில் நடந்த பேரணியில் பங்கேற்ற அமித்ஷா முன்னிலையில், முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி, திரிணமூல் எம்.பி. சுனில் மொண்டல், 6 திரிணமூல் எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் எம்எல்ஏ தபசி மண்டல், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ அசோக் திண்டா, காங்கிரஸ் எம்எல்ஏ சுதீப் முகர்ஜி மற்றும் திரிணமூல், இடதுசாரிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பாஜகவில் இணைந்தனர்.
Comments