காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்ரேவுக்கு எழுதிய கடிதத்தில் எவ்வித அரசியல் அழுத்தமும் எழவில்லை : சிவசேனா தரப்பில் விளக்கம்

0 1255
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்ரேவுக்கு எழுதிய கடிதத்தில் எவ்வித அரசியல் அழுத்தமும் எழவில்லை : சிவசேனா தரப்பில் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள கடித விவகாரத்தில், எந்த அரசியல் அழுத்தமும் எழவில்லை என மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா விளக்கமளித்துள்ளது.

மகாராஷ்ராவில் மகா கூட்டணி உருவானபோது, ஏற்படுத்தப்பட்ட குறைந்தபட்ச செயல் திட்டத்தின்படி, தலித்துகள், பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுமாறு, மகாராஷ்டிரா முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்ரேவுக்கு, நினைவூட்டல் கடிதம் ஒன்றை, சோனியா காந்தி எழுதியிருந்ததாக, பிடிஐ, செய்தி வெளியிட்டது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், கொரோனா பேரிடர் காரணமாகவே, மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுப்பதில் தேக்கம் ஏற்பட்டதாகவும், விரைவில் அவை நிறைவேற்றப்படும் என்றும், உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments