கோலார் விஸ்ட்ரான் தொழிற்சாலையில் அப்பட்டமான விதிமீறல் நடந்துள்ளதாக கர்நாடக அரசு நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு

0 1475
கோலார் விஸ்ட்ரான் தொழிற்சாலையில் அப்பட்டமான விதிமீறல் நடந்துள்ளதாக கர்நாடக அரசு நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு

தொழிலாளர் போராட்டம் வெடித்த கோலார் விஸ்ட்ரான் தொழிற்சாலையில் அப்பட்டமான விதிமீறல் நடந்துள்ளதாக கர்நாடக அரசு நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது.

ஆப்பிள் போன்களை அசெம்பிள் செய்யும் பணியை இந்த நிறுவனம் செய்து வந்தது. இந்த தொழிற்சாலையில் கடந்த 12 ஆம் தேதி நிகழ்ந்த கலவரம் குறித்து கர்நாடக தொழிற்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

அதில், அனுமதிக்கப்பட்ட 5000 தொழிலாளர்களுக்குப் பதிலாக 10,500 பேர் பணியமர்த்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

எட்டுமணி நேர ஷிப்டுக்குப் பதிலாக 12 மணி நேரம் தொழிலாளர்களை வேலை வாங்கிய நிர்வாகம், அவர்களுக்கான ஊதியத்தை தாமதப்படுத்தியதும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்தை கொடுக்காமல் ஏமாற்றியதுமே கலவரம் வெடிக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments