தெருவில் நடந்து சென்ற மூதாட்டியை தள்ளிவிட்டு 9 சவரன் தங்க சங்கிலி பறிப்பு - சிசிடிவி காட்சி
தெருவில் நடந்து சென்ற மூதாட்டியை தள்ளிவிட்டு 9 சவரன் தங்க சங்கிலியை திருடன் பறித்து செல்லும் சிசிடிவி காட்சி
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தெருவில் நடந்து சென்ற மூதாட்டியை கீழே தள்ளி 9 சவரன் தங்க சங்கிலியை திருடன் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தாராபடவேடு பாலாஜி நகரை சேர்ந்த நாகராஜ் மனைவியான ராணி, நேற்று மாலை கடைக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து அவரை முதலில் நோட்டமிட்டனர்.
பிறகு ஒருவன் மட்டும் திடீரென பின்பக்கமாக வந்து சங்கிலியை பிடித்து இழுக்க, நிலைகுலைந்து ராணி சாய்ந்து விழுந்தார். இதை கண்டுகொள்ளாத திருடன் சங்கிலியை பறித்து கொண்டு ஓடிவிட்டான்.
Comments