டெல்லியில் 3.9 டிகிரி செல்ஷியசாக குறைந்த இரவு நேர வெப்பநிலை

0 929

டெல்லியில், இந்த சீசனில் மிகவும் குறைந்த வெப்ப நிலையாக இன்று 3 புள்ளி 9 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.

டெல்லி சப்தர்ஜங்கில் பதிவான இந்த வெப்பநிலை, இயல்பை விட 4 டிகிரி குறைவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு இமாலயத்தில் இருந்து பனி நிறைந்த காற்று வீசுவதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களிலும் டெல்லியில் இரவு நேர வெப்பநிலை 5 டிகிரிக்குளாகவே இருக்கும். குளிர் மற்றும் மூடுபனியின் காரணமாக டெல்லியும் புறநகர் பகுதிகளும் புகைசூழ்ந்த பகுதிகளைப் போல காட்சி அளிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments