ரிஸ்க்கெடுத்து இருட்டில் பெட்ரோல் திருட போன திருடன்.. வெளிச்சத்திற்காக தீக்குச்சியை கொளுத்தியபோது வாகனம் தீப்பிடித்ததால் விபரீதம்..!
ரிஸ்க்கெடுத்து இருட்டில் பெட்ரோல் திருட போன திருடன்.. வெளிச்சத்திற்காக தீக்குச்சியை கொளுத்தியபோது வாகனம் தீப்பிடித்ததால் விபரீதம்..!
இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடும்போது, வெளிச்சத்திற்காக தீக்குச்சியை கொளுத்தியபோது வாகனம் பற்றி எரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை தாம்பரம் காந்தி நகரை சேர்ந்த பத்ரி, கடந்த வாரம் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருட முயற்சித்துள்ளார். இருட்டாக இருந்ததால் வெளிச்சத்திற்காக தீக்குச்சியை கொளுத்தியுள்ளார்.
எதிர்பாராதவிதமாக கசிந்திருந்த பெட்ரோல் குப்பென்று பற்றிக்கொள்ள, திருடனுக்கு தேள்கொட்டிய நிலையில், வசமாக சிக்கிக் கொண்டார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சம்பவ நாளில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
Comments