தமிழகத் தென் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத் தென் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
தென்கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Comments