அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயார் எனச் சீனா அறிவிப்பு

0 2682
அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயார் எனச் சீனா அறிவிப்பு

மெரிக்காவுடனான வேறுபாடுகளைக் களைந்துவிட்டு ஜோ பைடன் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் பெய்ஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, இருநாடுகளுக்கான பொது நலன்களை மறந்துவிட்டுச் சீனாவை அமெரிக்கா கடுமையாக விமர்சித்ததால் உறவு மோசமடைந்ததாகக் குறிப்பிட்டார்.

கொரோனா, பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம், இனச் சமத்துவம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக ஜோ பைடன் கூறியதை வாங் இ சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments