ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் 36 ரன்களில் இந்தியா சுருண்டது

0 6049
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் 36 ரன்களில் இந்தியா சுருண்டது

டிலெய்டு கிரிக்கெட் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் 36 ரன்களுக்குச் சுருண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 191 ரன்களும் எடுத்தன. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாம் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆஸ்திரேலியப் பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.

முகமது சமி ஒரு ரன் எடுத்த நிலையில் காயமடைந்து வெளியேறியதால் இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 36 ரன்களுடன் முடிந்தது. பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹேசில்உட் 5 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இந்திய அணி வீரர்களில் மூவர் ரன் ஏதும் எடுக்காததுடன், எவருமே ஒற்றை இலக்க ரன்களைத் தாண்டவில்லை. டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ்களிலேயே இந்திய அணி எடுத்த மிகக் குறைவான எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன் 1974ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 42 ரன்கள் எடுத்தது இந்திய அணியின் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments