லவ் ஜிகாத் புகாரில் கைதான இளைஞரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில் அவரது மனைவிக்கு கருச்சிதைவு நேரிட்டதாக தகவல்

0 1155
லவ் ஜிகாத் புகாரில் கைதான இளைஞரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில் அவரது மனைவிக்கு கருச்சிதைவு நேரிட்டதாக தகவல்

உத்தரப்பிரதேசத்தில் லவ் ஜிகாத் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், காப்பகத்தில் வைக்கப்பட்ட அவரது மனைவிக்கு கருச்சிதைவு நேரிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்காக சென்றபோது, லவ் ஜிஹாக் தடுப்புச் சட்டத்தில் கணவரை கைது செய்த போலீசார், மனைவியை காப்பகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால், மதமாற்றத்திற்காக கட்டாயத் திருமணம் செய்ததாக ஆதாரம் இல்லாததால், இளைஞரை சொந்த பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.

இருப்பினும், 13 நாட்களாக சிறையில் அடைபட்டிருக்கும் தனது கணவரும், அவரது சகோதரரும் இன்னும் விடுவிக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments