டெல்லி மாநகராட்சிகளில் ரூ.2500 கோடி ஊழல் - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி மாநகராட்சிகளில் ரூ.2500 கோடி ஊழல் - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 2010 ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டு ஊழலையும் மிஞ்சும் வகையில், டெல்லியில், பாஜகவின் வசமுள்ள மாநகராட்சிகளில், 2500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவையில் இதைத் தெரிவித்த அவர், ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் கட்டிட நிர்மாணப்பணிகளுக்கு அனுமதி வழங்குவதில் ஊழல் நடப்பதாக கூறினார்.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சட்டப்பேரவையில் குரல் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த குற்றச்சாட்டை அடிப்படை ஆதாரமற்றது என பாஜக தரப்பு கடுமையாக மறுத்துள்ளது.
Comments