கொரோனா தடுப்பூசியால் தாறுமாறான பக்க விளைவுகள் ஏற்படுமா?- பிரேசில் அதிபர் எச்சரிக்கை

0 1352
கொரோனா தடுப்பூசியால் தாறுமாறான பக்க விளைவுகள் ஏற்படுமா?- பிரேசில் அதிபர் எச்சரிக்கை

தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என ஃபைசர் நிறுவனம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி உள்ள பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சநாரோ, என்ன விளைவு வேண்டுமானாலும் அதனால் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

ஆரம்பம் முதல் கொரோனவை ஒரு சாதாரண காய்ச்சல் என்று கூறி வரும் அவர், தடுப்பூசிக்கு எதிராக கடுமையான கருத்துக்களையும் கூறி வருகிறார்.

எனினும் கடந்த வியாழக்கிழமை பிரேசிலில் தடுப்பூசித் திட்டத்தை துவக்கி வைத்த அவர், தடுப்பூசி இலவசமாக போடப்படும் ஆனால் அது கட்டாயமில்லை என்று கூறினார். ஆனால் தடுப்பூசியை கட்டாயமாக்கி பிரேசில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments