ஜோ பைடனுக்கும் மனைவிக்கும் திங்கள்கிழமை கொரோனா தடுப்பூசி

ஜோ பைடனுக்கும் மனைவிக்கும் திங்கள்கிழமை கொரோனா தடுப்பூசி
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனுக்கும் அவரது மனைவி ஜில் பைடனுக்கும் வரும் திங்கள்கிழமை கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிசுக்கும் அவரது கணவருக்கும் ஒரு வாரம் கழித்து தடுப்பூசி போடப்படும் என ஜோ பைடனின் பத்திரிகை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
தமக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டாம் என நினைத்தாலும், தடுப்பூசியின் அவசியத்தை உணர்த்துவதற்காக முதலிலேயே தடுப்பூசி போட முடிவு செய்த தாக ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஜோ பைடனுக்கு 78 வயதாகி விட்டதால், கொரோனா தொற்று எளிதில் பரவும் ஆபத்து அதிகம் உள்ளவர்கள் பட்டியலில் அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments