பாகிஸ்தானுக்கு எதிராக துல்லியத் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டு வருகிறது -பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி புதிய குற்றச்சாட்டு

0 2747

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மகமூத் குரேஷி (Shah Mahmood Qureshi) குற்றம்சாட்டியுள்ளார்.

2016 உரி தாக்குதலுக்கு பதிலடியாக ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதைதொடர்ந்து 2019 பிப்ரவரியில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலை அடுத்து, பாலாகோட் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் துபாயில் செய்தியாளர்களிடம் பேசிய குரேஷி, இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக புலனாய்வுத்துறை தகவல் அளித்திருப்பதாக கூறினார்.

தாக்குதல் திட்டத்துக்கு கூட்டாளிகள் என கருதும் முக்கியமான நாடுகளிடம் மறைமுக ஒப்புதல் பெறும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டிருப்பதாகவும் குரேஷி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments