கேரள நகராட்சி அலுவலகத்தில் பாஜக பதாகைகளை அகற்றி தேசியக் கொடியை ஏற்றிய வாலிபர் அமைப்பினர்

கேரள நகராட்சி அலுவலகத்தில் பாஜக பதாகைகளை அகற்றி தேசியக் கொடியை ஏற்றிய வாலிபர் அமைப்பினர்
கேரளாவில் நகராட்சி கட்டடம் மீது கட்டப்பட்டிருந்த பாஜகவின் பதாகைகளை அகற்றிய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அங்கு தேசியக் கொடியை ஏற்றினர்.
கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இடது சாரிகளின் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் மோடி, அமித் ஷா மற்றும் சிவாஜியின் பதாகைகளைக் கட்டியிருந்த பாஜகவினர் அதில் ஜெய் ஸ்ரீராம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் பாலக்காட்டில் கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகம் வந்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பாஜக விளம்பரத்தை அகற்றி அங்கு தேசியக் கொடியைக் கட்டினர்.
Comments