கர்நாடகாவில் எட்டு வயது குழந்தையை காரில் கடத்தி ரூ 17 கோடி கேட்டு மிரட்டல்

0 1167
கர்நாடகாவில் எட்டு வயது குழந்தையை காரில் கடத்தி ரூ 17 கோடி கேட்டு மிரட்டல்

ர்நாடகாவில் மங்களூரையடுத்துள்ள உஜிரே பகுதியில் 8 வயது குழந்தையை காரில் கடத்திச் சென்ற இரண்டு மர்ம நபர்கள் குழந்தையை உயிருடன் விடுவிக்க 17 கோடி ரூபாயை பிட்காயின் மூலம் செலுத்துமாறு பெற்றோருக்கு வாட்ஸ் ஆப் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

விளையாடப் போன குழந்தை தனது தாத்தாவுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது குழந்தை கடத்தப்பட்டுள்ளது. இதுவரை போலீசார் யாரையும் கைது செய்யவில்லை.

குழந்தையை கடத்தியவர்கள் ஏன் பிட்டிகானில் பணம் செலுத்தக் கேட்கின்றனர் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குழந்தை இருக்கும் இடம் தெரியாததால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments