ஜெகன்மோகன் அரசு நிர்வாகம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

0 1053
ஜெகன்மோகன் அரசு நிர்வாகம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

ஆந்திராவில் அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் சலனப்படுத்துவதாக கூறி அதனை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது.

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே மோதல் உருவானது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போப்டேவுக்கு புகார் தெரிவித்து ஜெகன்மோகன்ரெட்டி கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து ஆந்திர தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலர் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டனர். தமது வாழ்க்கையில் ஒரு வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் இப்படி ஒரு உத்தரவைப் பார்த்ததில்லை என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி போப்டே ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments