ஜப்பானில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு..! சாலை மூடப்பட்டதால் வாகனங்கள் அணிவகுப்பு
ஜப்பானில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு..! சாலை மூடப்பட்டதால் வாகனங்கள் அணிவகுப்பு
ஜப்பானில் பெய்து வரும் கடுமையான வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக கானேட்சு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஒரு கார் பனியில் மூழ்கியது. இதனையடுத்து அந்த சாலை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் 40 மணி நேரமாக வரிசை கட்டி நின்றன.
வாகன ஓட்டுனர்கள் பசியிலும் குளிரிலும் நடுங்கியபடியே காத்திருந்தனர். அவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டியும் குடிநீர் பாட்டில்களும் விநியோகிக்கப்பட்டன. நேற்று தலைநகர் டோக்கியோ செல்லும் சாலைகள் மட்டும் சீரமைக்கப்பட்டன. மற்ற பகுதிகளில் பனிப்பொழிவால் பல நூறு வாகனங்கள் சிக்கியுள்ளன.
Comments