ஐநா.சபை வாகனம் மீது இந்திய -பாக் எல்லை அருகே தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் பழி - இந்தியா திட்டவட்ட மறுப்பு..!

0 1271
எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே ஐநா.சபை அதிகாரிகள் சென்ற வாகனம் இந்திய ராணுவத்தினரால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் கூறிய புகாரை இந்தியா மறுத்துள்ளது.

எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே ஐநா.சபை அதிகாரிகள் சென்ற வாகனம் இந்திய ராணுவத்தினரால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் கூறிய புகாரை இந்தியா மறுத்துள்ளது.

அடிப்படையே இல்லாத தவறான தகவல் என்று வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்திய ராணுவத்தினர் தரப்பில் இன்று எந்தவிதத் துப்பாக்கிச் சூடும் நடக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா.சபையின் வாகனங்கள் நடமாட்டம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படுவதால் குழப்பம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐநா.வாகனம் அடையாளம் தெரியாத ஏதோ ஒரு பொருளால் தாக்கப்பட்டது உண்மைதான் என்றும் வாகனம் சேதம் அடைந்த போதும் யாருக்கும் காயம் இல்லை என்றும் தெரிவித்துள்ள ஐ.நா.சபை செய்தித் தொடர்பாளர், இது தொடர்பாக விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments