பள்ளிக் கட்டடம் கட்ட நிலம் வழங்கிய மூதாட்டி..!

0 4980
ஆரணி அருகே, புதிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தனக்கு சொந்தமான 21 செண்ட் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் மூதாட்டி ஒருவர்...

ஆரணி அருகே, புதிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தனக்கு சொந்தமான 21 செண்ட் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் மூதாட்டி ஒருவர்...

திருவண்ணாமலை மாவட்டம் கரிப்பூர் பகுதியில் நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 104 மாணாக்கர்கள் படித்துவருகின்றனர்.

65 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளிக் கட்டடம் சிதிலமடைந்ததை அடுத்து புதிய கட்டடம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாதம் பள்ளியின் தலைமை ஆசிரியை, ஊர் பொதுமக்களிடம் கருத்துகேட்பு கலந்தாய்வு கூட்டத்தை நடத்தியுள்ளார். அப்போது தனக்கு சொந்தமான 21 செண்ட் நிலத்தை தானமாக வழங்க முன்வந்திருக்கிறார் 68 வயது மூதாட்டியான சரோஜா.

இதற்கிடையே சரோஜாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட, பள்ளிக்காக நிலத்தை தானமாக கொடுப்பது தொடர்பான தனது வாக்குறுதியை எங்கு நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என எண்ணி, கவலையடைந்தார். இதன் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம், தனது நிலத்தை பள்ளிக்கல்வி துறைக்கு குடும்பத்துடன் சேர்ந்து பத்திரப்பதிவு செய்து கொடுத்திருக்கிறார் சரோஜா.

இதையடுத்து, ஆரணி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 26 இலட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த இடத்தில் புதிய பள்ளிக்கூடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளது.

தினமும் கூலிவேலை செய்தால் தான் வாழ்க்கையை நகர்த்த முடியும் என்ற நிலையில் இருக்கிறது சரோஜாவின் குடும்பம். வறுமையில் உழன்றாலும் எதிர்கால சந்ததியின் நலனுக்காக, தனக்குச் சொந்தமான 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார் இந்த மூதாட்டி.

தனது கிராமத்து எதிர்கால சந்ததியினர் அழிவில்லாத கல்விச் செல்வத்தைப் பெறுவதற்காக தனது நிலத்தை வழங்கிய சரோஜா மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் என்பதில் ஐயமில்லை...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments