எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்த திட்டம்- பொதுமக்களிடம் மத்திய அரசு கருத்துக் கேட்பு

எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்த திட்டம்- பொதுமக்களிடம் மத்திய அரசு கருத்துக் கேட்பு
எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பொதுமக்களிடம் கருத்துகளை கோரி வருகிறது.
வாகனங்களில் பெட்ரோலை பயன்படுத்துவதால் செலவு அதிகரிப்பதுடன், சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்படும் என்பதால் அதனைக் கட்டுப்படுத்த எத்தனாலைக் கலந்து எரிபொருளாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு ஆலோசனை தெரிவித்து உள்ளது.
‘இ20’ எனப் பெயரிடப்பட்ட இந்த எரிபொருளைப் பயன்படுத்துவதால் கார்பன் உமிழ்வைக் குறைக்கமுடியும் என்றும், எண்ணெய் இறக்குமதி குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments