மேற்குவங்கத்தில் அடுத்தடுத்து திரிணாமுல் காங். எம்எல்ஏக்கள் ராஜினாமா

மேற்குவங்கத்தில் அடுத்தடுத்து திரிணாமுல் காங். எம்எல்ஏக்கள் ராஜினாமா
மேற்குவங்கத்தில், கடந்த 24 மணி நேரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து 3 எம்எல்ஏக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஒரு பெண் எம்எல்ஏவும் பதவி விலகியிருப்பது, அம்மாநில அரசியலில், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கத்தில், நாளை சனிக்கிழமை நடைபெறும், பாஜக பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்கிடையே, திரிணமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து, அமைச்சர் சுவேந்து அதிகாரி, பாரக்பூர் தொகுதி (Barrackpore) திரிணாமுல் எம்எல்ஏ ஷில்பத்ரா தத்தா (Shilbhadra Dutta), பந்தபேஷ்வர் (Pandabveswar) தொகுதி எம்எல்ஏ ஜிதேந்திர திவாரி (Jitendra Tiwari) ஆகியோர், ராஜினாமா செய்துள்ளனர்.
சிபிஎம் பெண் எம்எல்ஏ தப்சி மண்டல் (Tapsi Mondal) என்பவரும் ராஜினாமா செய்துள்ளார்.
Comments