அடுத்த இரு ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய நாட்டின் பெயர், கொடிகளை பயன்படுத்த தடை - சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் உத்தரவு

0 2717
அடுத்த இரு ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய நாட்டின் பெயர், கொடிகளை பயன்படுத்த தடை - சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் உத்தரவு

ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷ்யா அடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டின் பெயர், கொடியை பயன்படுத்த தடை விதித்துள்ளது விளையாட்டு தீர்ப்பாயம்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ரஷிய வீரர்கள் பலர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர். வீரர்களுக்கு ரஷ்யாவே உதவியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு சுவிட்சர்லாந்து நாட்டின் லூசானே நகரில் உள்ள விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் நடைபெற்றது.

அப்போது அடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டியில் ரஷியா நாட்டின் பெயரையும், கொடியையும் பயன்படுத்த தடைவிதித்து உத்தரவிட்டது.

பொதுவான அணி அல்லது பொது வீரர் என்ற அடிப்படையில் ரஷிய வீரர்கள், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments