ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் விழா எளிமையாக நடைபெறும் என அறிவிப்பு

அமெரிக்காவின் புதிய அதிபராக பைடன் பதவியேற்பு விழா, மிகவும் எளிமையாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக பைடன் பதவியேற்பு விழா, மிகவும் எளிமையாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த மாதம் 3ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடென் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, இந்நாட்டின் 59வது அதிபராக அடுத்த மாதம் 20ம் தேதி அவர் பதவியேற்கிறார். அதற்கான விழா ஏற்பாடுகளை வெள்ளை மாளிகை செய்து வருகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக, பதவியேற்பு விழா மிகவும் எளிமையாக நடத்தப்படும் என்றும், மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே விருந்தினர்கள் அழைக்கப்பட உள்ளனர் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.மக்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாகவும்,வீடுகளில் இருந்தே மக்கள் இதை கண்டு மகிழலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Comments