ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் - மகாராஷ்டிரா சுகாதாரத்துறை

மகாராஷ்டிராவில் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஸ் தோபே கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஸ் தோபே கூறியுள்ளார்.
இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பு ஊசி கொடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கினால், மகாராஷ்டிராவில் ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்றார்.
இதற்காக மாநில அரசு தயாராக உள்ளது என்ற அவர், முதல் கட்டமாக சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றார்.
மருத்துவ ஊழியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Comments