கார் மோதி உயிரிழந்த, உணவு டெலிவரி விற்பனை ஏஜெண்ட் : பலியானவர் குடும்பத்தினரை சந்தித்து நடிகர் சோனு சூட் ஆறுதல்

0 2103
கார் மோதி உயிரிழந்த, உணவு டெலிவரி விற்பனை ஏஜெண்ட் : பலியானவர் குடும்பத்தினரை சந்தித்து நடிகர் சோனு சூட் ஆறுதல்

மும்பையில், அதிவேகத்தில் வந்த மெர்சிடஸ் பென்ஸ் கார் மோதி உயிரிழந்த, உணவு டெலிவரி விற்பனை ஏஜெண்ட் குடும்பத்திற்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என, நடிகர் சோனு சூட் (Sonu Sood) உறுதியளித்துள்ளார்.

வடக்கு மும்பையில் உள்ள ஓஷிவாரா என்ற பகுதியில், அதிவேகத்தில் வந்த சிகப்பு நிற மெர்சிடஸ் பென்ஸ் கார், தனது கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தடுப்பில் மோதியதோடு, முன்னால் சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டி மீது மோதியதில் உணவு டெலிவரி ஏஜெண்ட் உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பாலிவுட் நடிகர் சோனு சூட், தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும், உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments