மருத்துவமனைகளில் தீ தடுப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க குழு - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மருத்துவமனைகளில் தீ தடுப்பு ஏற்பாடுகள் குறித்து தணிக்கை செய்வதற்காக குழுக்களை அமைக்கும்படி மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்த து தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு விசாரணையை மேற்கொண்டுள்ளது.
நீதிபதி அசோக் பூஷண், நீதிபதிகள் ஆர்.எஸ். ரெட்டி, எம்.ஆர். ஷா அடங்கிய அமர்வு மாநில அரசுகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் உட்பட அனைத்து மருத்துவமனைகளின் தீ தடுப்பு ஏற்பாடுகளை தணிக்கை மேற்கொள்ளும் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும், இந்த தணிக்கை ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Comments